அர்ஜுனரு வில்லு, அரிச்சந்திரன் சொல்லு
நான் U.S வந்த புதுசுல கார் ஓட்ட பழகிக்கிட்டு இருந்தேன். கார் ஓட்டி என்ன பண்ணப்போற ? பக்கத்து ஊரில் இருக்கிற பில் கேட்ஸ பாக்கப்போறியா? அப்படியெல்லாம் சிறு புள்ளத்தனமா கேட்கப்படாது. இங்க அத்தியாவசிய தேவைகளில் காரும் ஒன்னு. நம்ம ஊரில் சைக்கிள் வச்சு இருக்கிற மாதிறி இங்க எல்லோரும் கார் வச்சு இருப்பாங்க. நகரத்தில் இருந்தா கார் இல்லாம ஒரளவுக்கு சமாளிக்கலாம். ஆனால் நகரத்தை விட்டு வெளியே இருந்தீங்கனா கஷ்டம் தான். அதனால வந்த இரண்டாவது நாளே கார்ல உட்கார்ந்து steering பிடிக்க ஆரம்பிச்சேன். சுமாராவும் வண்டிய ஓட்டினேன். JetLag கொஞ்சம் பாக்கி இருந்ததால அன்றைய தினம் பயிற்சியை சீக்கிரமா முடிச்சுக்கிட்டு வீட்டுக்கு போய் தூங்கிட்டேன்.
இரண்டு நாளுக்கு அப்புறம் மீண்டும் கார் ஓட்டலாம்னு சொல்லிட்டு கார எடுத்தேன். "அர்ஜுனரு வில்லு, அரிச்சந்திரன் சொல்லு...." பாட்ட full BASS-ல வச்சிக்கிட்டு, வண்டி ஜோரா நகர்ந்துச்சு. எந்த இடத்துல ஓட்டினேன் தெரியுமா? வேற எது, நம்ம ஆபிஸ் parking lot தான். parking lot-ல ஸ்பீட் லிமிட் 15மைல், ஆனால் நான் 25மைல் வேகத்துல வண்டிய விட்டேன். நாம நம்ம இந்திய மண்ணுல என்னைக்கு டிராபிக் ரூல்ஸ மதிச்சு இருக்கோம்? ரெட் சிக்னல் போட்டதுக்கு அப்புரமும் வண்டிய நிறுத்தாம போறதும், அப்படியே நிறுத்தினாலும் stop line-அ கிராஸ் பண்ணி நிறுத்துறதும் தானே நம்ம வழக்கம்.
பாட்டு நடுவில் "இவனொரு அதிசய புலி...." என்ற வரி இன்னும் என்ன நல்லா உசுப்பேத்தி விட்டுச்சு. ஒரு 10 நிமிஷத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லாம ஓட்டினேன். வலது பக்கமாகவும் இடது பக்கமாகவும் வண்டிய திருப்பி "8" போட்டுக்கிட்டு இருந்தேன். திடீர்னு ஒரு அதிர்வு. என்னனு பார்த்தா, வண்டி பிளாட்ஃபார்ம் மேல ஓடிக்கிட்டு இருக்கு. பயந்து போய் வேகமா பிரேக்க அமுக்கினேன். ஆனால் வண்டி எதிரில் இருந்த 10 அடி உயர மரத்தை பதம் பார்த்துட்டு தான் நின்னுச்சு. பிரேக் அமுக்கினீங்களே, ஏன் வண்டி நிக்கவில்லைனு நீங்க கேட்கலாம். நானும் அதே கேள்வியைத் தான் கேட்டேன். நான் அமுக்கினது பிரேக் இல்ல, ஆக்ஸலரேட்ர் :(.
நிமிர்ந்து நின்னுக்கிட்டு இருந்த அந்த மரம், சாய்ந்து போயுடுச்சு. ஆனா கீழே விழவில்லை. (இது ரொம்ப முக்கியம்). நான் பண்ண சேட்டை வீடியோ கேமராவில் கண்டிப்பா பதிவாயிருக்கும் என்ற பயத்துல எனக்கு car-o-phobia வந்துடுச்சு. அதுக்கப்புரம் ஒரு வாரத்துக்கு என்னால சரியா வேலை செய்ய முடியல. இப்போ கொஞ்சம் தெளிவா இருக்கேன்.
பிடித்த பாடல் வரிகள்:
பிடித்த பாடல் வரிகள்:
Comments
hahaa, ROTFL.. epdi ithellam..?
Padal varigal update super :)
Naanum car driving kathukkum bothu indha maadhiri neriyaa loosuthanam pannirken.. arasiyal vaazhkaila idhellaam sagajam..
Nalla song pottu vandiya ottirkeenga ponga :-)
நீங்க ரொம்ப நல்லவங்க போலிருக்கு. கார விசாரிச்சீங்க, ஆனா கார் ஓட்டினவனப் பத்தி விசாரிக்கல. :(
அம்பி,
எல்லாம் தானா வருது.
syam,
இன்னும் 9 பாக்கி இருக்கு ;-)
bharani,
நன்றி. அது ஒரு எதிர்பாரா விபத்து. யாரிடமும் கோபமில்லை.
seenu,
விரைவில் எதிர்பார்.
Gopalan,
ம்ம்
Ms,
பாட்டுக்கு இங்க பஞ்சமே இல்லைங்க.
Btw, Enna adhu Padal varigal.... :> Something fishy!! Something new, sparky happening in life??
adhukaaga... experience varathukaaga., accident panna koodaadhu.......
its all part of driving...
PS:- for ur safety., neenga first nikkira car'a otta palagunga...
சரிங்க..;-)
Thamizhpriyan,
ம்ம்ம்ம்ம்ம்....
Ammu,
நீங்க ரொம்ப ஃபீல் பண்ணரீங்க.....
Marutham,
எனக்கு எதுவும் ஆகலீங்க. Nothing new is happening in my mife ;-)
Usha,
காருக்கு எதுவும் ஆகல. மரம் இன்னும் உயிரோட தான் இருக்கிறது ;-)
Gops,
தத்துவ மழைய பொழியரீங்க
Neenga sonna sariya thaan irukkum ;-)
Ammu,
:))