Recipe: பிறந்த நாளைக் கொண்டாடுவது எப்படி?
இன்று எங்கள் நண்பர் அரவிந்தின் பிறந்த நாள் மிக விமரிசையாகக் கொண்டாடினோம். இச்சம்பவம் இப்பதிவிற்கு மூல காரணம்.
நண்பரின் பிறந்த நாளை எப்படி கொண்டாடலாம் என தெரிந்து கொள்ள வாருங்கள்.
தேவையானப் பொருள்கள்:
1. பழுத்த தக்காளிகள் - சில
2. முட்டை - நபர் ஒன்றுக்கு, ஒன்று அல்லது இரண்டு (அழுகியதாக இருந்தால் மிக உகந்தது)
3. ஐஸ் கிரீம் - தேவையான அளவிற்கு
4. கேக்.
செய்முறை:
முதலில் பிறந்த நாள் கொண்டாட இருக்கும் நண்பரை கேக் வெட்டச் சொல்லவும். கேக் மேலே உள்ள கிரீமை ஓரமாகத் தள்ளி விட்டு, கேக்கை சாப்பிடவும். பிறகு கேக் கிரீமை முகத்தில் தடவவும். விளைவு?? Fair & Handsome கிரீம் போட்டது போல், நண்பர் பளபளப்பார். செர்ரி பழம் இருந்தால் அதை பொட்டு வைக்க உபயோகித்துக் கொள்ளலாம். ரோஸ் நிறத்தில் உள்ள கிரீமால் மீசை வரையலாம் ;-). "மணமகனே மருமகனே வா" போன்ற situation song பாடி பிரமாதப்படுத்தலாம்.
பிறகு தக்காளிகளை நண்பர் மீது பிழிந்து அவரைக் குளிப்பாற்றலாம். பிறந்த நாள் திருவிழாவின் உச்ச கால பூஜையை இப்போது நெருங்கி விட்டோம். முட்டையை இரண்டாகப் பிளந்து நண்பர் தலை மேல் ஆஃப் பாயில் அல்லது ஆம்லெட் போடலாம். இல்லையெனில், சொயீப் அக்தர் மாதிறி அதி வேகத்தில் எறிந்து முட்டையை சுக்குநூறாக்கலாம்.
இப்பொழுது நண்பர் அழாமல் அழுது கொண்டிருப்பார். அவரை குளிர்விக்கும் வகையில், மைக்ரோ ஓவனில் வைத்து கூழ்மமாக்கப்பட்ட ஐஸ் கிரீமை அவர் மேல் கொட்டி அவரை குளிர்விக்கலாம்.
இவ்வாறு எங்கள் நண்பர் நள்ளிரவு 12 மணிக்கு கவுரவிக்கப்பட்டார். நண்பர் நீடூழி வாழ என் வாழ்த்துக்கள்.
Comments
சொல்ல மறந்துட்டேன். கோக்-காபிஷேகமும் நடந்துச்சு.
(ippadi ellam sencha, adutha b'day'ku mr. escape aagida maataar?)
Btw, have u seen the post by kutty on the same topic. See his link, another interesting post.
Yenna ippolaam neraya Marquee use panreenga!! Bayangara Influence pola!!!
en B'Day-ku innum 2 months irukku. Indha game-ku naan varala. enna vitudunga
Krk,
;-)
Shuba,
Adhellam apdi thaan...
Gops,
Thanx. Avar odamaattaar..;-) odinaalum, irukaravangaluku pooja pannidalaam
Ambi,
My B'Day is on September.
Marutham,
Thanx. I am yet to see Kutti's post. Influence ellaam onnum illainga....chumma pidicha varigala poduren ;-)
Thanx solla marandhuten. Thanx. Ungala maari periyaval appreciate panna naan koduthu vachu irukanum ;-)
Why?? Why???? Ethana naalaa indha veri??
Gopalan,
Thanx for ur inputs. Lets try next time
Arjuna,
Implement panni paarunga, nalla irukkum
Sasiprabha,
Gud gal ;-)
Thanx for your brilliant Idea
I was a dayscholar..so I cudnt enjoy that..
What your colleague said is completely correct....neenga unga B'Day-ku adi odha edhuvum vaangalaya??