Road trip

வர வர என்னுடைய அலுவலகத்துல 8 மணி நேரமும் வேலை செய்யற அளவுக்கு வேலை கொடுத்துட்டு வராங்க. அதனால Blog படிக்க மட்டும் தான் முடியுது. இங்க மே 29ம் தேதி Memorial day அனுசரிக்க பட்டதால long Weekend கெடச்சுது. நண்பர்கள் எலோரும் 2 நாள் Roadtrip போகலாம்னு முடிவு செஞ்சு Oregon state-அ சுத்தி பாத்துட்டு வந்தோம். எந்தெந்த இடத்த பாத்துட்டு வந்தோம்னு இதோ சொல்றேன்.

Klamath falls
இந்த இடம் Oregon-California state பார்டர்ல இருக்கு (நான் Washington state-ல இருக்கேன்). மாங்கு மாங்குனு 400 மைல (~650 கி.மீ) 7 மணி நேரம் ட்ராவல் பன்னிட்டு வந்து பார்த்தா, ஒரு அருவியும் அந்த இடத்துல இல்ல. Klamath falls என்பது ஒரு ஊர் பேராம், பாத்துட்டு கடுப்பாயிட்டோம். விசாரிக்காம வந்தது எங்க தப்பு தான்.
Crater Lake
எரிமலை வெடிச்சதனால, மலை மேல இந்த ஏரி உருவாச்சுனு சொல்ராங்க. பனி காரணமாக North entrance ஏற்கனவே மூடப்பட்டதால 100 மைல் அதிகமா சுத்திட்டு South entrance-க்கு போனோம். நாங்க போகர நேரம் பாத்து பனி பெய்ய ஆரம்பிச்சுடுச்சு. அதனால இந்த வழியையும் மூடிட்டாங்க. நமக்கு நேரம் எப்போ நல்லா இருந்திருக்கு?. கார்ல இருந்து கீழ இறங்கி போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு, திரும்பிட்டோம்.
Sand Dunes
கடலோரம் வாங்கிய காற்று....குளிராக இருந்தது நேற்று.....Sand dunes என்பது காற்றினால் உருவான மணல் குன்று. பசிபிக் கடலோரத்துல இருக்கிற ஒரு மணல் குன்றுக்கு போய், மணல்ல ஓடரத்துக்காக உருவாக்கப்பட்ட வாகனங்களை வாடகைக்கு எடுத்து ஓட்டினோம். வாடகை கொஞ்சம் அதிகம் தான், ஆனாலும் மணல் மேட்டுல ஓட்டும் போது இருந்த த்ரில்லிங் அதை மறக்கடிக்க செஞ்சுடுச்சு.
Sea Lion Caves
லிஃப்டின் உதவியோடு 200 அடி ஆழத்துக்கு கீழே போய், இயற்கையா உருவான கடல் குகையில் இருக்கிற கடல் சிங்கத்தை (Sea Lion) பார்த்தோம். இந்த இடத்துக்கு அருகே ஒரு Light house இருந்துச்சு. அது உலகத்திலே அதிக முறையா போட்டோ போட்டோ எடுக்கப்பட்ட Light house ஆம்.

இத்தோட முடிச்சுக்கிட்டு நாங்க பசிபிக் பெருங்கடல் கடலோரச் சாலையில் பயணித்து வீடு போய் சேர்ந்தோம். இந்த பயணத்துல நாங்க ஆறு, ஏரி, மலை, காடு போன்ற பல இயற்கைக் காட்சிகளை பார்த்து மகிழ்ந்தோம். இது போல காட்சிகளை நான் இது வரை டிஸ்கவரி சேனல் மற்றும் வால் பேப்பர்ல மட்டும் தான் பார்த்து இருக்கேன்.

Comments

Syam said…
yenna Bala innum pani peyutha anga...nice places
சீனு said…
dei bala....kelappura pooo...."kadaloooram vangiyeaa katru...kuliraga irunduthu neatru"...ennamoo pooda bala...kavingana ayettu irukka..
Butterflies said…
so enjoying nice to read your exp post more photos of places u visited
Ms Congeniality said…
Wow Balag,
Had ur share of fun and "bulb" pola!! Hope u have more of fun-filled experiences :-)
Bharani said…
super place-ba...nalla veruphethareenga bala
Nengalaum Tamil la elutha aarambichutengala Good.Nalla ooru sutharenga pola?nice pics:)keep posting more in Tamil.
Unknown said…
Syam,
No. Snow was only at Crater Lake

Seenu,
Adhu MGR paatu da

Veda,
Adikadi visit pannunga

Shuba,
I have uploaded the photos which I liked at
http://www.flickr.com/photos/balamurugang/

Ms,
On the first day got 2 bulbs. But enjoyed playing in the snow.

Bharani,
No. Photo-va paathutu neenga sandhosha paduveenganu thaan share panninen.

Gopalan,
Sure. I like writing in Tamizh
Sasiprabha said…
Being with nature is ever joyous. "Nature has a magical way of filling this world with wonders". U please keep posting your trips and photos of that places.. I love the english word Exploring.. As i love to roam around the world.. At present i can have some snaps and information. I'll go for exploration later. THANKS for sharing your enjoyment.
Sasiprabha said…
Before my death i've to go to amazon and find the hidden wonders.
KC! said…
enakum indha madhiri falls thedi poi verum idathai partha aapu kidaichiruku, in local Bangalore. But view super-a irukunga..I mean the first snap! Awesome
Unknown said…
Sasi,
It will be really nice to enjoy the beauty of nature. Ungal kanavu meipada en vaazhthukkal.

Usha,
Is there any falls near to Bgl?. I have gone to Shivasamudhram falls which is 110km from Bgl.
8 மணி நேரம் கடுமையா வேலை செய்யறீங்க பாவம். :(
எல்லா படமும் மேட்டரும் நல்லாயிருக்கு ஆனா இன்னும் கொஞ்சம் விரிவா எபதியிருக்கலாம்.
Unknown said…
Anu,
I was working for more than 8 hrs when I was in India. Now I am putting padam as if I am working for 8 hrs ;-).
Thanks for ur comments. Keep visiting.
Gnana Kirukan said…
Good write up Bala :)..nice pics :)
Unknown said…
Thanks Arjun. Keep visiting
Anonymous said…
Hi Friend! You have a great blog over here!
Please accept my compliments and wishes for your happiness and success!
If you have a moment, please take a look at my too much fun site.
Have a great day!

Popular posts from this blog

Mutual Fund Investment Tracker

A New place