Road trip
வர வர என்னுடைய அலுவலகத்துல 8 மணி நேரமும் வேலை செய்யற அளவுக்கு வேலை கொடுத்துட்டு வராங்க. அதனால Blog படிக்க மட்டும் தான் முடியுது. இங்க மே 29ம் தேதி Memorial day அனுசரிக்க பட்டதால long Weekend கெடச்சுது. நண்பர்கள் எலோரும் 2 நாள் Roadtrip போகலாம்னு முடிவு செஞ்சு Oregon state-அ சுத்தி பாத்துட்டு வந்தோம். எந்தெந்த இடத்த பாத்துட்டு வந்தோம்னு இதோ சொல்றேன். Klamath falls இந்த இடம் Oregon-California state பார்டர்ல இருக்கு (நான் Washington state-ல இருக்கேன்). மாங்கு மாங்குனு 400 மைல (~650 கி.மீ) 7 மணி நேரம் ட்ராவல் பன்னிட்டு வந்து பார்த்தா, ஒரு அருவியும் அந்த இடத்துல இல்ல. Klamath falls என்பது ஒரு ஊர் பேராம், பாத்துட்டு கடுப்பாயிட்டோம். விசாரிக்காம வந்தது எங்க தப்பு தான். Crater Lake எரிமலை வெடிச்சதனால, மலை மேல இந்த ஏரி உருவாச்சுனு சொல்ராங்க. பனி காரணமாக North entrance ஏற்கனவே மூடப்பட்டதால 100 மைல் அதிகமா சுத்திட்டு South entrance-க்கு போனோம். நாங்க போகர நேரம் பாத்து பனி பெய்ய ஆரம்பிச்சுடுச்சு. அதனால இந்த வழியையும் மூடிட்டாங்க. நமக்கு நேரம் எப்போ நல்லா இருந்திருக்கு?. கார்ல இருந்து கீழ இறங்கி போ...