Posts

Showing posts from June, 2006

Time to Dream

This info. might be old to some of you. Following is a 2 minute movie made by M.Night Shyamalan, the famous thriller movie director (director of "The Sixth Sense", "Signs",....) for American Express card. I was very happy to see him in this advertisement for an american product. :-) The same movie & behind the scenes are available at American Express website. Nayagan Till now I have seen a few parts of Nayagan movie. Last week I got an oppurtunity to watch the entire movie. It was a perfect team work and worth watching it. I really enjoyed the movie a lot. Also I came to know that it is one of the few Indian movies to be listed in TIME magazine's ALL-TIME top 100 movies, issued in 2005. The article is here . கண்ணைக் கொஞ்சம் திறந்தேன்... கண்களுக்குள் விழுந்தாய்.... எனது இமைகளை மூடிக்கொண்டு, சின்னஞ்சிறு கண்களில் உன்னைச் சிறை எடுத்தேன் .

Recipe: பிறந்த நாளைக் கொண்டாடுவது எப்படி?

இன்று எங்கள் நண்பர் அரவிந்தின் பிறந்த நாள் மிக விமரிசையாகக் கொண்டாடினோம். இச்சம்பவம் இப்பதிவிற்கு மூல காரணம். நண்பரின் பிறந்த நாளை எப்படி கொண்டாடலாம் என தெரிந்து கொள்ள வாருங்கள். தேவையானப் பொருள்கள்: 1. பழுத்த தக்காளிகள் - சில 2. முட்டை - நபர் ஒன்றுக்கு, ஒன்று அல்லது இரண்டு (அழுகியதாக இருந்தால் மிக உகந்தது) 3. ஐஸ் கிரீம் - தேவையான அளவிற்கு 4. கேக். செய்முறை: முதலில் பிறந்த நாள் கொண்டாட இருக்கும் நண்பரை கேக் வெட்டச் சொல்லவும். கேக் மேலே உள்ள கிரீமை ஓரமாகத் தள்ளி விட்டு, கேக்கை சாப்பிடவும். பிறகு கேக் கிரீமை முகத்தில் தடவவும். விளைவு?? Fair & Handsome கிரீம் போட்டது போல், நண்பர் பளபளப்பார். செர்ரி பழம் இருந்தால் அதை பொட்டு வைக்க உபயோகித்துக் கொள்ளலாம். ரோஸ் நிறத்தில் உள்ள கிரீமால் மீசை வரையலாம் ;-). "மணமகனே மருமகனே வா" போன்ற situation song பாடி பிரமாதப்படுத்தலாம். பிறகு தக்காளிகளை நண்பர் மீது பிழிந்து அவரைக் குளிப்பாற்றலாம். பிறந்த நாள் திருவிழாவின் உச்ச கால பூஜையை இப்போது நெருங்கி விட்டோம். முட்டையை இரண்டாகப் பிளந்து நண்பர் தலை மேல் ஆஃப் பாயில் அல்லது ஆம்லெட் போடலாம். இல்ல...

அர்ஜுனரு வில்லு, அரிச்சந்திரன் சொல்லு

நான் U.S வந்த புதுசுல கார் ஓட்ட பழகிக்கிட்டு இருந்தேன். கார் ஓட்டி என்ன பண்ணப்போற ? பக்கத்து ஊரில் இருக்கிற பில் கேட்ஸ பாக்கப்போறியா? அப்படியெல்லாம் சிறு புள்ளத்தனமா கேட்கப்படாது. இங்க அத்தியாவசிய தேவைகளில் காரும் ஒன்னு. நம்ம ஊரில் சைக்கிள் வச்சு இருக்கிற மாதிறி இங்க எல்லோரும் கார் வச்சு இருப்பாங்க. நகரத்தில் இருந்தா கார் இல்லாம ஒரளவுக்கு சமாளிக்கலாம். ஆனால் நகரத்தை விட்டு வெளியே இருந்தீங்கனா கஷ்டம் தான். அதனால வந்த இரண்டாவது நாளே கார்ல உட்கார்ந்து steering பிடிக்க ஆரம்பிச்சேன். சுமாராவும் வண்டிய ஓட்டினேன். JetLag கொஞ்சம் பாக்கி இருந்ததால அன்றைய தினம் பயிற்சியை சீக்கிரமா முடிச்சுக்கிட்டு வீட்டுக்கு போய் தூங்கிட்டேன். இரண்டு நாளுக்கு அப்புறம் மீண்டும் கார் ஓட்டலாம்னு சொல்லிட்டு கார எடுத்தேன். "அர்ஜுனரு வில்லு, அரிச்சந்திரன் சொல்லு...." பாட்ட full BASS-ல வச்சிக்கிட்டு, வண்டி ஜோரா நகர்ந்துச்சு. எந்த இடத்துல ஓட்டினேன் தெரியுமா? வேற எது, நம்ம ஆபிஸ் parking lot தான். parking lot-ல ஸ்பீட் லிமிட் 15மைல், ஆனால் நான் 25மைல் வேகத்துல வண்டிய விட்டேன். நாம நம்ம இந்திய மண்ணுல என்னைக்கு டிர...

Buisiness card CD

Image
Have you ever seen CDs/DVDs in any shapes other than the regular Circular ones? Will you believe that CD versions of paper buisiness cards are available? I am using a smaller CD which contains hardware drivers in my Lab as in the below picture. It simply sits in my wallet ;-) Pic courtesy: http://www.cdigitalmarkets.com/busniess_card_plus.htm Visit http://www.proactionmedia.com/shaped_cd_dvd.htm to see the different shapes of CDs available in the market.

ஆசை

அலுவலக வேலைகளை அவசர அவசரமாக முடித்துக்கொண்டிருந்தான் கோபி. பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் கணிப்பொறியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் இவன், தீபாவளிப் பண்டிகை விடுமுறையைப் பெற்றோர்களுடன் கொண்டாட இன்று இரவு அவனுடைய சொந்த ஊருக்குச் செல்கிறான். "Monday வந்துடுவ இல்ல?" என்றார் அவனது மேனேஜர். "வந்து தொலையறேன்" என மனதில் நினைத்துக் கொண்டு, "கண்டிப்பா ஸார்" என்றான் கோபி. வாகன நெரிசலில் மீண்டு பேருந்து நிலையத்திற்க்கு வருவதற்குள் போதும் போதும் என ஆகிவிட்டது. பண்டிகை என்பதால் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் பண்டிகைக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுவதால் அவன் பயணிக்க இருக்கும் பேருந்தைக் கண்டுபிடிக்க சிறிதே தாமதமானது. "என்ன கூட்டம் டா" என முனுமுனுத்துக் கொண்டே முன்பதிவு செய்த இருக்கையில் வந்தமர்ந்தான். Meeting, Project மற்றும் மேனேஜர் தொல்லை இல்லாமல் மூன்று நாட்கள் நிம்மதியாக இருக்கலாம் என்பதை நினைத்துப் பெரு மூச்சு விட்டான். பேருந்து புறப்பட சற்று முன்பு..... பய ணி: பஸ் திருவண்ணாமலை போகுங்களா?? பே.நடத்துனர்: சீட்...

சென்னை செந்தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - பாவேந்தர் பாரதிதாசனார் . இந்தப் பாடலை எழுதியவர் எங்க ஊருக்காரருங்கோ. எந்த மொழியிலும் இல்லாத 'ழ'கர ஓசை தமிழ் மொழிக்கே உரித்தானதுனு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா,அது எவ்வளவு தூரம் உண்மைனு எனக்கு தெரியாது. தமிழ் பேசர பல பேருக்கு 'ழ' -வ சரியா உச்சரிக்க தெரியாது. 'மழை'க்கும், 'மலை'க்கும் வித்தியாசம் இல்லாம உச்சரிப்பாங்க. நான் நல்லாவே 'ழ' -வ உச்சரிப்பேன். இப்படி சந்தோஷமா இருந்த நான், என் நண்பர் அனுப்பின, link-அ திறந்து பார்த்து பயந்து போய்ட்டேன். நீங்களும் பாருங்க. http://en.wikipedia.org/wiki/Madras_bashai http://en.wikipedia.org/wiki/Madras_bashai_vocabulary அதுல இருந்த வார்த்தைகள் எல்லாம் சென்னைல உபயோகத்துல இருக்காம். பல வார்த்தைகள நான் கேள்விப் பட்டதே இல்ல. சென்னை மக்களோட அந்நியோன்யமா பேச இந்த வார்த்தைகள் நல்லா உபயோகப்ப்டும் என்ற தேவைய உணர்ந்த நான், இந்த வார்த்தைகள கத்துகரத்துக்கு, 4 வரி நோட்டுப்புத்தகம் வாங்கி ஒவ்வொரு வார்த்தையையும் பத்து தடவ எழுதிப் பாக்கலாமா இல்ல VETA இங்கில...